தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்கு சொந்தமான உடனடி செய்தி பரிமாறும் செயலியான வாட்ஸ்அப் படிப்பிற்கும், வேலைக்கும் தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிர்க்கும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும் இளைய தலைமுறையினர் தங்கள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். அண்மையில் வாட்ஸ்அப் அதன் அம்சங்களை மீண்டும் புதுப்பித்துள்ளது.
அதாவது குரல் பதிவு செய்திகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் விருப்பத்தை அளித்துள்ளது. இந்தநிலையில் மிகவும் தேவைப்படும் மற்றும் பயனுள்ள இந்த அம்சம் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் குரல் பதிவுகளை அனுப்பக்கூடிய அம்சம் சமீபகாலமாக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருந்தாலும் கூட அண்மையில் சேர்க்கப்பட்ட முன்னோட்ட விருப்பம் அதன் பயன்பாட்டை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் கிடைக்கிறது. ஆனால் ஒரு சிலர் இன்னும் இதன் பயனை பெற முடியவில்லை என்றால் செயலியை புதுப்பித்துக் கொண்டு பயனடையலாம்.
வழிமுறைகள் பின்வருமாறு.
உங்களது வாட்ஸ்அப் செயலியில் குழு அல்லது தனிப்பட்ட நபரின் சாட்ஐ திறக்க வேண்டும்.
மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பதிவை லாக் செய்ய அதை மேலே இழுத்து விடவும்.
குரலைப் பதிவு செய்யத் தொடங்கி, அது முடிந்ததும் ‘நிறுத்து’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ப்ளே’ விருப்பத்தை கிளிக் செய்து பதிவை கடைசி வரை கேட்கவும். அதன் குறிப்பிட்ட பகுதிகளைக் கேட்க, இடையில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம்.
இப்பொழுது, குரல் பதிவை அனுப்புவதற்கு ‘Send’ ஐகானைக் கிளிக் செய்யவும். நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான பட்டனை கிளிக் செய்து அழித்துக் கொள்ளலாம்.
குரல் உரையை மீண்டும் பதிவு செய்து, சோதித்து இதே போல் அனுப்பிக் கொள்ளலாம்.