Categories
பல்சுவை

அடடே.. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா…. பார்த்தா அசந்து போயிருவீங்க…. மாஸ் அப்டேட்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தையும் கையில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் மூலம் இணையத்தின் ஊடாக தேடி தெரிந்து கொள்வது ஏராளமானோரின் வழக்கமாகிவிட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் என எங்கு சென்றாலும் இந்த தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தநிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் புதிய அம்சம் ஒன்று இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அங்காடிகளான மளிகை கடைகள் உணவகங்கள், ஆடையகம் உள்ளிட்ட பல்வேறு வணிகம் சார்ந்த நிறுவனங்களின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிரத்தியேக சர்ச் இன்டர்பேஸ் ஒன்றையும் வாட்ஸ்அப் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பயனர்கள் சுலபமாக தங்களுக்கு வேண்டியவற்றை தேடி அறிந்து கொள்ள முடியுமாம். இருந்தபோதிலும் இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |