தனது பயனாளர்களுக்கு whatsapp நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்களை இறக்கி கொண்டே வருகிறது. ஏனென்றால் மார்க்கெட்டில் நிறுவனத்திற்கு போட்டி அதிகமாக இருப்பதால் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய அம்சத்தை கொண்டுவரும் whatsapp இப்போது அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வர இருக்கிறது. இதற்கான டிரெயிலை ஏற்கனவே whatsapp தொடங்கிவிட்டது. இதுகுறித்து whatsapp நிறுவனத்தின் சீக்ரெட் தகவல்களை வெளியிடும் டிராக்கர் கூறியதாவது. இந்த புதிய அம்சத்திற்கான சோதனை whatsapp பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபிள் இடம்பெரும் . இந்நிலையில் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும்.
மேலும் எடிட் மெசேஜ் அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்ட டைம் வரை எடிட் செய்யலாம். இந்த அம்சம் டெலிட் மெசேஜ் அம்சத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி எடிட் செய்யப்படும் குறுந்தகவல்களின் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. தற்போது உருவாகும் பணிகளில் இருப்பதால் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் பிசினஸ் வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு மட்டும் சந்தா முறையை வழங்க துவங்கியது. இந்த அம்சம் whatsapp பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் புழகத்தில் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.