இளையதளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்குகின்ற பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் இணையத்தில் செம வைரலானது மற்றும் மாபெரும் வரவேற்பினைப் ரசிகர்களுக்கிடையே பெற்றது. இப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் அடுத்த மாதத்தில் விஜய் நடிக்க இருக்கின்றார்.
இந்நிலையில் விஜய்யின் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படமொன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது. அப்புகைப்படத்தில் விஜய் கையில் ஒரு குழந்தையை கொஞ்சும் படி குயூட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.