Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடடே..! வெறித்தனமா இருக்கே… அதிர வைத்த ஆப்கான் அணி…. வியந்து போன கிரிக்கெட் உலகம் …!!

ஐசிசி 20ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு 6 அணிகள், 6 அணிகள் இடம்பெற்று மோதுகின்றன. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதல் 2இடத்திலும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதல் 2இடத்திலும் உள்ளது. நெட் ரன் ரேட் நிலவரத்தை பார்த்தால் குரூப் 2இல் உள்ள ஆப்கானிஸ்தான் +6.500 வைத்து உலக கிரிக்கெட் அரங்கை  வியக்க வைத்துள்ளது.

பொதுவாக நெட் ரன் ரேட் +2, +3 வரை பார்த்த பலருக்கும் ஆப்கானிஸ்தான் +6 ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த அணி கடந்த 25ஆம் தேதி ஸ்காட்லாந்து அணியோடு மோதிய ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்த உயர்வுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புள்ளி பட்டியல்:

Categories

Tech |