Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! 1995 இல் வெளியான பாடல்…. இப்ப செம டிரெண்டிங்…. என்ன பாடல் தெரியுமா …???

இயக்குநர் லோகேஸ் கனகராஜின் ‘விக்ரம்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் கமல் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன்தாஸ், காளிதாஸ் ஜெயராமன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் இடம் பெற்றுள்ள பழைய பாடல் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என பலரும் தேடி வருகின்றனர். 1995ம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தில் வரும் பாடல்தான் அது.

இந்த படத்தில் அருண்பாண்டியன், நெப்போலியன், ரோஜா, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருப்பார்கள். இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், “‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ அனுபவம் குறித்து ட்விட்டரில் பகிர்த்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டரில், 1995ம் ஆண்டு இந்தப் பாடல் வி.ஜி.பி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஆதித்தன் இசையமைத்தார். நான் ப்ரோக்ராம் செய்த இந்த பெப்பி விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |