Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! 2நாளில் முடிச்சுட்டாரு…. நம்மை இப்படி கவனிக்குறாங்களே…. நெகிழ்ந்து போன திருமா ..!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒரே தலைப்பின் கீழ் விடுதலை வெளிச்சம், ஒரே நபரை பற்றி கூறியது கூறல் இல்லாமல் வெவ்வேறு பொருள் தெரிவிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே தலைவர்கள் சொன்னதை போல, அண்ணன் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் சொன்னது போல வெறும் புகழுரையாக மட்டுமில்லாமல் இது சொல்லப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

தமிழ் சமூகத்திற்கு அடையாளம் படுத்த வேண்டிய தேவை இருக்கிறது, அங்கீகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது, அடுத்து வரக்கூடிய இளம் தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்கின்ற அந்த நோக்கில் இந்த கவிதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலே அவர் இங்கே சொன்னது….  இந்த என்னுரையிலே பதிவு செய்திருப்பது என்னவென்றால்… ஒரு நாளில் எழுதி முடிக்கப்பட்ட கவிதை இது. செப்டம்பர் 17 தொடங்கி செப்டம்பர் 19-ல் எழுதி முடித்துவிட்டார்.

இவ்வளவு விரைவாக கவிதை எழுதக்கூடிய கவிஞர் இவராகத்தான் இருப்பார் என்று நான் கருதுகிறேன். ஒரு புத்தகத்திற்கான 90 பக்கங்களுக்கான ஒரு கவிதையை ஒரே கவிதையை ஓரிரு நாட்களில் எழுதி முடித்திருக்கிறார், என்றால் அமரேசன் சொன்னதை போல நம்மை நுட்பமாக கவர்ந்திருக்கிறார், காதலிக்கிறார். கருத்தியலை, நாம் பேசும் பேச்சு, நாம் எழுதும் எழுத்து , நம்முடைய களத்தில் ஆற்றும் செயல், நாம் நடத்தும் போர், போராட்டங்கள், இவை அனைத்தையும் அவர் உன்னிப்பாக கவனித்து இருக்கிறார்.

உற்று நோக்கி இருக்கிறார், பெரியார் பார்வையில் உற்று நோக்கி இருக்கிறார், அம்பேத்கர் பார்வையில் உற்று நோக்கி இருக்கிறார், சமூகநீதி பார்வையில் உற்று நோக்கி இருக்கிறார் .அதனால் அவருக்கு இது சரி என பட்டிருக்கிறது. வேறு பார்வையில்…. சனாதான பார்வையில் பார்த்து இருந்தால் நம்மை வசை பாடி இருப்பார், தூற்றி இருப்பார்.

பெரியார் பார்வையில், சமூக நீதி பார்வையில், நம்முடைய நடவடிக்கைகளை அவரை உற்றுப் பார்த்து இருக்கிறார், தொடர்ந்து பார்த்திருக்கிறார், ஆழ்ந்து பார்த்து இருக்கிறார் ,தெளிந்து பார்த்து இருக்கிறார். அதனால் ஓரிரு நாட்கள் இடைவெளியிலேயே புத்தகத்திற்கான 227 என்ற பத்திகளை எழுதி முடித்து ஒரு புத்தகமாக தொகுத்து இருக்கிறார் என்பது பாராட்டுதலுக்குரியது என திருமா தெரிவித்தார்.

Categories

Tech |