நடிகர் பிரஜின் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது இருபத்தி மூன்று நாட்களிலேயே முடிவடைந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பிரஜின், பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, அன்புடன் குஷி, சின்னதம்பி போன்ற தொடர்களில் நடித்திருக்கின்றார். இவர் பல வருடங்களாகவே வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார். பிரஜின் சாபூத்திரி, மணல்நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, எங்கேயும் நான் இருப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரைப் பெரிதாக பேசபடவில்லை.
https://www.instagram.com/p/CaEImIwrTC0/?utm_source=ig_web_button_share_sheet
இவர் அண்மையில் “வைதேகி காத்திருந்தாள்” தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது “நினைவெல்லாம் நீயடா” என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து தொடரில் இருந்து விலகினார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தன. தற்பொழுது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக பிரஜின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 23 நாட்களில் முடிந்தது கற்பனை கூடப்பண்ணாத உண்மை எனக் கூறியிருக்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவின் புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.