பாஜக கட்சி அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, 35 ஆண்டு ஆண்டு காலமாக இந்த கட்சியை வளர்த்து கண்ணில் இருந்து வரக்கூடிய கண்ணீருக்கு என விலை கொடுக்குறீர்கள் சகோதர சகோதரிகளே, அதுமட்டுமல்ல இங்கு இவ்வளவு நம்முடைய சகோதரிகள் வந்திருக்கின்றீர்கள், உங்களுக்கு தெரியும்.
இந்த ஆட்சி காலத்தில் மட்டும் ஒரு சகோதரிக்கு சமத்துவம் இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் தான். தமிழகத்திலே 55 லட்சம் வீடுகளில் கழிப்பறை நம்முடைய மோடிஜி கட்டிக் கொடுத்திருக்கிறார், 55 லட்சம் வீட்டில் முதல் முதலாக கழிப்பறை வந்திருக்கின்றது. 94 லட்சம் பெண்களுக்கும் முதன் முதலாக இலவசமாக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு,
உங்களுடைய வங்கி கணக்கில் கொரோனா காலகட்டத்திலே 1,500 ரூபாய் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுத்திருக்கிறார். எந்த ஒரு ஏழையும் கூட பசி இல்லாமல் இருப்பதற்காக தான் ஏழைகளுக்கான உணவு திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2020 பிப்ரவரி ஆரம்பித்தது இன்றையில் இருந்து மார்ச் 2022 வரை கொண்டு போய் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.