உத்திரபிரதேசத்தில் நாளை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைக் காப்பாற்ற பாஜக என்னென்னவோ திட்டங்களை கூறி மக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அகிலேஷ் யாதவின் பகுஜன் சமாஜ் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு KG முதல் PG வரை படிக்க இலவச கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் கட்டுப்படுத்தப்படும் எனவும் காலியாக உள்ள 3 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் கூறியுள்ளார்.