யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆறறிவு கொண்ட மனிதர்கள் குப்பைத்தொட்டியில் குப்பையை போடமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள விலங்குகள் நாங்கள் மனிதர்களை விட மேல் என்பதை குறிக்கும் வகையில் பலமுறை நிரூபித்து வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் நடந்து சென்று கொண்டிருந்த யானை வீட்டின் அருகே உள்ள குப்பைகளை பார்த்து அதை தன் தும்பிக்கையால் எடுத்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கொண்டு போடுகின்றது. விலங்குகள் மிகவும் புத்திசாலி குறிப்பாக மக்களுடன் ஒப்பிடும் பொழுது யானைக்கு கூட பொது இடத்தில் குப்பை போடக்கூடாது என்கின்றது தெரிந்துள்ளது என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.