Categories
டெக்னாலஜி

அடடே…! Youtube Shorts-இல் விரைவில் புதிய அம்சம்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு  பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது.

டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற சிறிய வீடியோக்கள் யூடியூபில் யூடியூப் ஷார்ட்ஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை யூடியூபர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த  யூடியூப் ஷார்ட்ஸ் விரைவில் டேப்லட் மற்றும் டெக்ஸ்டாப் யூசர்களுக்கும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |