Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அடபாவிங்களா இதுக்கு தான் அப்படி நடிச்சீங்களா..! வசமாக சிக்கிய வாலிபர்-பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் படுத்திருந்து செல்போனை திருடிச் சென்ற வாலிபர் மற்றும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திராநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உதவியாக தங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகளின் உறவினர் போல் 2 பேர் படுத்திருந்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் மணிகண்டனுடைய செல்போனை திருடினர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய காவல் துறையினரின் உதவியுடன் செல்போன் திருடிய வாலிபர் மற்றும் இளம்பெண்ணை பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வாலிபர் வேப்பந்தட்டை தாலுகாவில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் முரளி என்பது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபருக்கு சென்னை குன்றத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்த போது மதுரை மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தில் வசித்து வரும் சுரேசின் என்பவரது மகள் நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நந்தினியை, முரளி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை பார்க்க வந்தது போல் நடித்து மணிகண்டனின் செல்போனை திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த மணிகண்டனின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இரண்டு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Categories

Tech |