மடகாஸ்கரில் அமைச்சர் ஒருவர் சரக்கு கப்பல் கவிழ்ந்து 14 பேர் உயிரிழந்தயிடத்தை பார்வையிட சென்ற போது அவர் பயணித்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானதையடுத்து அவர் சுமார் 12 மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளார்.
மடகாஸ்கரில் கவிழ்ந்த சரக்கு கப்பல் ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்வதற்காக மடகாஸ்கர் நாட்டின் அமைச்சரான ஜெர்ஜி விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
ஆனால் அந்த விமானம் துர்தஸ்டவசமாக பாதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய அமைச்சர் அவர் பயணித்த ஹெலிகாப்டரின் இறக்கையை துடிப்பாக பயன்படுத்தி சுமார் 12 மணி நேரம் கடலில் நீந்தியுள்ளார். அவ்வாறு கடலில் நீந்திய அமைச்சர் சுமார் 12 மணி நேரம் கழித்து விமானத்தின் இறக்கையை படகு போல் பயன்படுத்தி கரை சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, தன்னுடைய உயிர் பிரியும் நேரம் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.