Categories
உலக செய்திகள்

அடப்பாவமே….! ஆணுக்கு மாதவிடாய்…… 20 ஆண்டுகளாக இப்படியா….. வினோத சம்பவம்….!!!!

சீனாவை சேர்ந்த 33 வயதான ஒரு நபருக்கு 20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்சனை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதாக கூறி மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பலகட்ட சோதனை செய்து பின்னர் குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவில் உயிரியல் ரீதியாக அவர் பெண்ணாக இருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

அவருக்கு பெண்ணுகுண்டான பாலியல் குரோமோசொன்கள் இருப்பதும், பெண்ணுக்கான கருப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளும் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கு இந்த மாதவிடாய் பிரச்சனை இருந்துள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மூலமாக அவருக்கு கருப்பை அகற்றப்பட்டது. இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்ததாவது அவரால் பிறரைப் போல இனப்பெருக்கத்தில் ஈடுபடவோ அல்லது விந்துக்களை உற்பத்தி செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |