Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…”உள்ளாடையை திருடியதற்காக இப்படியா பண்றது”…. ஆத்திரத்தில் நண்பன் செய்த காரியம்…!!

தனது உள்ளாடையை திருடியதற்காக நண்பனை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் தனது உள்ளாடையை திருடி அணிந்ததாக கூறிய நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பாண்டா பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருடன், பஹ்ரைச் பகுதியை சேர்ந்த விவேக் சுக்லா என்பவரும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையின் அருகே ஒரு அறையில் வசித்து வருகின்றனர்.

இதில் சுற்றுலா அஜய்குமாரின் உள்ளாடைகளை திருடியதாக கூறி உள்ளார். இதனால் அஜய்குமார் கோபத்தில் சுக்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுக்லாவை அஜய்குமார் பலமுறை குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து அஜய்குமார் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் சுக்லாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |