பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று பாதித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை ஓமிக்ரான் தொற்று பாதித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் மட்டும் 515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள்.