Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…! கணவனின் பிறந்தநாளில்…. மனைவி செய்த காரியம்….வெளியான பகீர் சம்பவம்…!!

குடிபோதையில் தொல்லை செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி கட்டப்பனை என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித் அன்னலட்சுமி தம்பதியர். கடந்த 6ஆம் தேதி ரஞ்சித் பிறந்தநாள் தினமான அன்று வீட்டிற்கு அருகில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது போலீசாருக்கு அவரது மனைவியின் மீது சந்தேகம் அடைந்து அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சியான உண்மைகள் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் குடித்துவிட்டு மனைவியை தொல்லை செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அன்னலட்சுமி ஆத்திரமடைந்து, அவரது கணவரின் தலையில் மரக்கட்டையால் அடித்ததால் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அன்னலட்சுமி அவரது கணவர் என்றும் கூட பார்க்காமல், அருகில் கிடந்த ஒரு கொடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, பின் வீட்டுக்கு பின்புறம் அவரது உடலை போட்டுவிட்டு எதுவும் தெரியாத போல் இருந்துள்ளார். இவ்வாறாக குடிபோதையில் தொல்லை செய்த கணவனை அவரது பிறந்த நாளில் மனைவி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |