Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில்… தொங்க விடப்பட்டிருந்த உடல்… பதைபதைக்க வைத்த வீடியோ…!!!

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரின் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரின் உடலானது வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் போராட்டம் செய்த இடத்திற்கு அருகே காவல்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதிப்பதாக கூறி அந்த வாலிபரை அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்ட சோனிபட் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |