சென்னையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் வந்த நபர்கள் தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் பலர் தங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் பல தவறுகளை செய்கின்றன. அந்த வகையில் பெரும்பாலான கொலை சம்பவங்கள் மது போதையினால்தான் அரங்கேறுகின்றது. குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் தாங்கள் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. அப்படி சென்னை பெரியமேடு எம்பி வத்ரன் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்த இளைஞரை அங்கு மது போதையில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென்று தாக்கியது.
இதை பார்த்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்தப் பகுதியில் போதை ஆசாமிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்கு இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தாக்குதலுக்குள்ளான இளைஞர் மற்றும் போதை ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.