Categories
மாநில செய்திகள்

அடப்பாவமே!…. “மணப்பெண் வீடு புகுந்து இளைஞர் செய்த காரியம்”…. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அருண் என்ற இளைஞர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய கழுத்தில் தாலி கட்ட முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அருணை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண் தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அருண் மற்றும் அருண் சகோதரர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |