Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… முன்னாள் முதலமைச்சரின் மைத்துனியா இவர்…? ஏன் பிளாட்பாரத்தில் வசிக்கிறார்… அதிர்ச்சி தகவல்…!!!

முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா என்பவரின் மைத்துனி நடைபாதையில் வசித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா. இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேல் மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்துள்ளார். இவருடைய மனைவியின் சகோதரி இரா பாசு. இவர் முப்பத்தி நான்கு வருடங்கள் பிரியநாத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முனைவர் பட்டம் பெற்றவர். 2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு இவர் பாரா நகரில் வசித்து வந்துள்ளார். பிறகு என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. கடந்த இரண்டு வருடமாக இவர் கொல்கத்தாவில் சாலையோரத்தில் வசித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

கிழிந்துபோன நைட்டியை அணிந்து அங்கு தெருவோரத்தில் வியாபாரிகளிடம் உணவு பெற்று வசித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது: “நான் தனது சொந்த முயற்சியில் தான் ஆசிரியர் ஆனேன். நான் முன்னாள் முதலமைச்சரின் உறவினர் என்பதை பலர் அறிந்திருந்தாலும், தனக்கு எந்தவித விஐபி அடையாளமும் தேவை கிடையாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இவர் சாலையோரத்தில் வசிப்பது பற்றி செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றது, இதற்கிடையே அவர் வேலை பார்த்த பள்ளியில் சென்று கேட்கும் பொழுது அவர் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவருக்கு ஓய்வு ஊதியம் கிடைக்காமல் போனது என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |