Categories
அரசியல்

“அடப்பாவமே!”…. மேயர் சீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக…. செம அப்செட்டில் அதிமுக தலைமை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக ஈரோடு மாவட்டத்தில் 12 பேரூராட்சிகளை கேட்டு அடம் பிடிப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுகவினர் கொங்கு மண்டலத்தில் வலுவான நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பாஜக 12 பேரூராட்சிகளை கேட்டு அடம் பிடிப்பதால் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Categories

Tech |