மேற்கத்திய நாடுகள், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு, பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய தொழிலதிபர்கள் பலரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்யாவின் பிரபல தொழிலதிபரான Roman Abramovich, அமெரிக்காவில் உள்ள தனது கோடீஸ்வர நண்பர்களிடம் தனக்கு சேவை செய்த ஊழியர்களுக்கு பில் செலுத்த கூட பணம் இல்லாத நிலையில் மில்லியன் கணக்கில் பணத்தை கடனாக கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் Roman Abramovich இந்த தகவல் தொடர்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.