Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… ரூ.29,00,000…  80 வயது முதியவரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்… மக்களே உஷார்…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் தனது வங்கி கணக்கில் 29 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்து வந்துள்ளார். தனது முதிர்வு காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்த பணத்தை ஆரம்பம் முதலே சேமித்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி ஒரு மோசடி கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக அந்த முதியவரிடம் கூறியுள்ளார். உங்களின் கேஒய்சி தகவல்கள் வங்கி கணக்கில் இணைக்கவில்லை. இதனால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதை இணைக்க வேண்டுமென்றால் உங்கள் வங்கி கணக்கு எண், டெபிட் கார்டு எண். வாடிக்கையாளரின் பான் கார்டு எண் மற்றும் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதற்கான ஓடிபி போன்றவற்றையும் கேட்டுள்ளனர்.

மோசடி கும்பல் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபகரிக்க கேட்கிறார்கள் என்பதை உணராத அந்த முதியவர் மோசடி கும்பல் கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து இருபத்தி ஒன்பது லட்சத்து எட்டாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதையடுத்து தனது பணம் பறிபோனதை உணர்ந்த முதியவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஆன்லைன் மோசடி மூலம் முதியவரிடம் பணத்தை பறித்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களே யாரேனும் உங்களுக்கு போன் செய்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி தகவல்களை கேட்டால் தயவுசெய்து கூறாதீர்கள். இதுபோன்ற மோசடி கும்பல் தொடர்ந்து மக்களிடம் பணத்தை பறிக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. எனவே மக்களே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

Categories

Tech |