பாகிஸ்தானில் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு ரியாத் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் விமானி அந்த விமானத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அவசரமாக தரையிறக்கினார். பிறகு அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வானிலை சரியானதும் இஸ்லாமாபாத்துக்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் விமானி “என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது. என்னால் இனி விமானத்தை இயக்க முடியாது” என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஆத்திரத்தில் விமானத்தை இயக்க சொல்லி கூச்சலிட்டுள்ளனர். பிறகு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் ஹோட்டல் ஒன்றுக்கு தற்காலிகமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதோடு மட்டுமில்லாமல் மாற்று விமானி வந்த பிறகு அனைத்து பயணிகளும் இஸ்லாமாபாத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.