Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடப்பாவமே…! “CSK” வ என்னால மறக்க முடியல…. குமுறிய “டுபிளெசிஸ்”….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலத்தில் டுபிளெசிஸ்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்துள்ள நிலையில் அவர் சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்களை தன்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான தோனியின் நண்பர் மற்றும் சிஎஸ்கே அணியில் இருந்து பிரிக்க முடியாத வீரராக டுபிளெசிஸ் இருந்துள்ளார். இவ்வாறு இருக்க நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் டுபிளெசிஸ்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் டுபிளெசிஸ் சிஎஸ்கே ரசிகர்களை தன்னால் மறக்க முடியாது என்றும், சென்னை பல நினைவுகளை தனக்கு தந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மிக்க நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |