Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. ஆடி தள்ளிப்படியில் இதுவா விற்பனை பண்றீங்க?…. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி சமூவிரோதிகள் பலர் கல்வராயன்மலை மற்றும் அடிவாரப் பகுதியில் சாராயம் காய்ச்சி பல இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாராயம் விற்பனை செய்ய கிராமபுறங்களில் ஏலமும் நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சமூக விரோதிகள் காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சங்கராபுரம் அருகில் அ.பாண்டலம் கிராம குடியிருப்பு பகுதியில் ஆடி தள்ளுபடியில் ஜவுளிகள் விற்பனை செய்வது போன்று சட்டத்தை மீறி சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது மதுபிரியர்களை கவரும் அடிப்படையில் ஒரு லிட்டர் சாராயம் வாங்கினால் ½ லிட்டர் சாராயம் இலவசம் என்ற அதிரடி சலுகையை சாராய வியாபாரி அறிவித்திருக்கிறார்.

இதனை அறிந்த மதுபிரியர்கள் ஆர்வத்துடன் வாட்டர் கேன்கள் மற்றும் பாலித்தீன் பைகளில் சாராயத்தை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இதனிடையில் போதை பொருட்களை ஒழிக்க ஒருபக்கம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே ஆடி தள்ளுபடியில் சாராயம் விற்பனை செய்யப்படும் சம்பவம் சமூகஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |