Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா! இப்படியா பண்ணுவீங்க…. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீடாபென் சர்வைவா என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு சோனு என்று பாசமாக பெயரிட்டு அழைத்து வருகிறார். நீடாபென் என்ற பெண் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சூராபாய் பர்வத். இவர் தன்னுடைய மனைவியை செல்லமாக சோனு என்று அழைப்பாராம். அதனால் நீடாபென் தனது நாயை செல்லமாக சோனு என்று அழைக்கும்போது சூராபாய்க்கு கோபம் வந்துள்ளது. தன் மனைவியை செல்லமாக அழைக்கும் போது நாய்க்கு அந்த பெயரை வைத்து பக்கத்து வீட்டுப்பெண் அழைக்கிறாரே என்று கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நீடாபென் தனது கணவர் வெளியே சென்ற நேரம் இளைய மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 5 பேரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பர்வத். மேலும் நீடா பெண்ணை தாக்கியுள்ளனர். தொடர்ந்து பர்வத்துடன் வந்த ஒருவர் கிச்சனில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து நீடாபென் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்ற சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த நீடாபென்-ன் கணவரும் வீடு திரும்பியுள்ளார்.

தனது மனைவி மீது தீ எரிவதை கண்டு தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி தீயை அணைத்துள்ளார். அதன் பின்னர் உடனடியாக நீடாபென்னை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இரு வீட்டாருக்கும் இடையில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் நாய்க்கு வைக்கப்பட்ட பெயரால் ஒரு பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் வினோதமாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |