மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உரிழந்தவர் உடலை குப்பை வண்டியில் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேவாஸ் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 21 வயது இளைஞரின் உடலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குப்பையைக் கொட்டுவது போல குப்பை வண்டியில் தூக்கிப் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கொரோனா நோயாளிகளின் உடலை இறக்கமின்றி கையாளும் செயல்கள் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.