Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!!… கொரோனா இழப்பீடு பெறுவதில் பித்தலாட்டம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

கொரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அறிவிக்கப்பட்ட ரூபாய் 50 ஆயிரத்தைப் பெற மருத்துவா்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பெறப்படுவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்போம் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இது குறித்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி. நாகரத்னா போன்றோர் அடங்கிய அமா்வு “சில மருத்துவா்கள் அளிக்கும் கொரோனா போலிச் சான்றிதழ்கள் வருத்தம் அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும். இல்லையெனில் இது நீண்டு கொண்டே செல்லும்.

இவ்வாறு மருத்துவா்கள் அளிக்கும் போலிச் சான்றிதழ்களால் சரியான நபா்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் தடைபடுகிறது. ஆகவே இதனை எப்படித் தடுப்பது என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு அரசு ஆலோசனை வழங்கலாம் என்று கூறியது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பதிவு செய்வதற்கு காலநிா்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த இழப்பீடு கோரும் நடவடிக்கை தொடா்ந்து கொண்டே இருக்கும். இழப்பீடு பெற கொரோனா உறுதி சான்றிதழ் அவசியமில்லை எனவும் மருத்துவா்களின் சான்றிதழ் இருந்தால் போதுமானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்த தளா்வு தற்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதனைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை மாா்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Categories

Tech |