Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!… போட்டோ எடுப்பதில் சண்டையா?… திருமண நிகழ்ச்சியில் கலவரம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் தரப்பில் முதலாவதாக புகைப்படம் எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்துள்ளது. அதாவது, மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பிரச்சனையை துவங்கி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திருமண நிகழ்ச்சி கலவரம் ஆகிவிட்டது.

இதில் மணமகனின் அக்கா, மாமா இரண்டு பேருக்கும் படுக்காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நடந்த கலவரத்தால் மணமகன் கடுப்பாகி மணமகளுக்கு தாலி கட்ட தயங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து ஒரு வழியாக சமாதானமாகி திருமண நடைபெற்றுள்ளது.

Categories

Tech |