Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! மக்கள் ஊரடங்கில் இருக்காங்க…. நீங்க இப்படி இருக்கீங்களே…! அதிர வைத்த பிரிட்டன் எம்.பி.க்கள் …!!

கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் ஊரடங்கை மேற்கொண்டிருக்கும்  நிலையில்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஓராண்டில் உறுப்பினர்கள் அருந்திய மது தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் கடந்த ஓராண்டில் நாடாளுமன்றத்தில்  அமைந்துள்ள மதுபான விடுதியில் எம்பிகள் அனைவரும் 1,33,000 பவுண்டுகள் தொகைக்கு மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது .ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்தில் மட்டுமே 27,600 பவுண்டுகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விடுதியில் சிப்ஸ்மித் ஜின் 800க்கும் மேற்பட்ட ஷார்ட்களும் நூற்றுக்கணக்கான கிளாஸ் வைன் மற்றும் ஷாம்பைங்  எல்லாம் கொரோனா நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்த நிலையில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .

மார்ச் மாதத்திற்குப் பிறகு ஜூலையில் ஊரடங்கு தளர்த்திய பிறகு பிரிட்டனில் உணவகங்கள் மற்றும் பப்கள் திறக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் சுமார் 9,700 பவுண்டுகள் தொகைக்கு நாடாளுமன்ற எம்பிகள் மது அருந்தியுள்ளனர். அக்டோபரில் மது விற்பனை 3,470 பவுண்டுகளாக சரிவடைந்துள்ளது. மொத்தமாக பிரிட்டன் நாடாளுமன்றம் 2020 ல் மது விற்பனை மட்டும்1,33,672 பவுண்டுகள் செலவழிக்கப்பட்டதாக  தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தின் உணவகங்கள் மற்றும் பார்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. அதனால் நஷ்டத்தில் இயங்குவதாகவும்  பொதுமக்களின் வரிப்பணத்தில் தான் நாடாளுமன்றத்தின் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் எல்லாம் திறம்பட செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |