உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பரித்பூர் பகுதியில் குடிபோதையில் 2 நபர்கள் நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வால்களை வெட்டி மதுபானத்துடன் சாப்பிட்டதாக பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) மீட்புப் பொறுப்பாளர் தீரஜ் பதக் என்பவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “பரித்பூரில் வசிக்கும் முகேஷ் வால்மீகி என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார்.
அப்போது போதை தலைக்கேறியதால் இருவரும், அங்கே இருந்த 2 நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வாலை வெட்டி மதுகுடிக்கும் போது சைட்டிஷ்ஷாக சாப்பிட்டு கொடூரச் செயலில் ஈடுபட்டு உள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, “புகாரின்படி அந்த இரண்டு பேர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கிடையில் காயமடைந்த நாய்க் குட்டிகள் இரண்டும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து இருக்கின்றனர்.