நியூசிலாந்தில் கொரோனா தொற்று குறைந்தும் கூட அதற்காக போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நீக்க படாததால் 1,000 த்துக்கும் மேலான போராட்டக்காரர்கள் வெலிங்டன் நகரில் கூடி விடுதலை வேண்டும் என்று அச்சிடப்பட்ட அட்டைகளை கையில் ஏந்திக்கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளார்கள்.
நியூசிலாந்து நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஆகையினால் நியூசிலாந்தில் கொரோனா பரவலின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் நியூசிலாந்தில் 90 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியினை முழுமையாக செலுத்தி கொண்டுள்ளார்கள்.
இருப்பினும் நியூசிலாந்து நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த கடுமையான விதிமுறைகள் குறைக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதாவது கையில் விடுதலை வேண்டுமென்று அச்சிடப்பட்ட அட்டைகளை ஏந்திக்கொண்டு 1,000 த்துக்கும் மேலான பொதுமக்கள் வெலிங்டன் நகரில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளார்கள். இவர்களை கட்டுப்படுத்த அப்பகுதியில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் போடப்பட்டுள்ளார்கள்.