உத்தரபிரதேசத்தில் சப்இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 27 வயதுடைய இளைஞரை சோதனை செய்யும் போது அவர் ப்ளூடூத் அமைப்புடன் தலையில் விக் அணிந்து இருந்ததையும், காதில் இயர்போன் அணிந்து இருந்ததையும், காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும் அந்த மாணவனின் காதுக்குள் இருந்த 2 ஏர்போர்ட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால், காதில் இருந்து அதை அகற்ற முடியவில்லை. மேலும் மாணவர் தேர்வில் ஏமாற்ற மேற்கொண்ட முயற்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வயர்லெஸ் இயர்போன்களை விக்குகள் மறைத்து தேர்வு எழுத வந்த நபர் மாட்டிக்கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.