Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடப்பாவிங்களா!…. இப்படி கூடவா ஏமாத்துவீங்க?…. அதிரடி காட்டிய போலீஸ்…!!!!

போலியான தங்க கட்டிகளை கொடுத்து பணம் பறித்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒருகோடி கிராமத்தில் கணேஷ்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவிதா நம்நாட்டு பகுதியில் துணிகடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது கடைக்கு ஜோதிடம் பார்ப்பதற்காக 2 நபர்கள் வந்துள்ளனர். அந்த 2 நபர்களும் மீண்டும் கடந்த மாதம் 4-ம் தேதி கவிதாவின் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கவிதாவிடம் எங்களிடம் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கட்டி இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பிறகு அந்த தங்க கட்டியை கவிதாவிடம் கொடுத்துவிட்டு 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து அந்த தங்க கட்டிகள் போலியானது என்பதை அறிந்துகொண்ட கவிதா வந்த 2 மர்ம நபர்களையும்  பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். அப்போது எனதிரிமங்கலம் பகுதியில் அந்த இரண்டு நபர்களையும் பார்த்துள்ளார்.

அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்துள்ளார். அதன்பிறகு அந்த 2 நபர்களையும் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த 50 வயதுடைய துர்கா ராவ் மற்றும் 30 வயதுடைய அங்கமாராவ் என்பது தெரியவந்தது. அதன்பிறகு இவர்கள் கவிதாவிடம் முதலில் உண்மையான தங்க கட்டியை காண்பித்து பணம் வாங்கிவிட்டு அதன்பிறகு கவிதாவை திசை திருப்பி  போலி தங்க கட்டியை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பிறகு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |