Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா?…. செய்முறை தேர்வில் தோல்வி…. ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்…!!!!

செய்முறை தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர்கள் ஆசிரியரை அடித்து சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் துங்காவில்  பழங்குடியினர் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 11 பேருக்கு செய்முறை தேர்வில் 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணித ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலர்களை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பெல்ட், பிரம்பு ஆகியவற்றால் ஆசிரியர்களை மாணவர்கள் அடித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் ஆசிரியர்கள் அலறினர். இருந்தாலும் மாணவர்களின் நலனை கருதி ஆசிரியர்கள் அவர்கள் மீது புகார் அளிக்க மறுத்து விட்டனர்.

Categories

Tech |