உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் என்ற பகுதியை சேர்ந்த மாணவன் அன்சுமான் தாபா டெல்லி பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தங்கியுள்ள மாளவிகா நகர் பகுதியில் இரவு கடைத் தெருவுக்குச் சென்றபோது ஆங்கிலத்தில் பேசியதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவனை நேப்பாளி என்று கூறி அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அதன் பிறகு தன்னுடைய வளர்ப்பு நாயை ஏவி விட்டு அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். நாய் மாணவனின் உடலில் பல இடங்களில் கடித்து குதறி உள்ளது. அந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவனை நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.