Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… இதுக்கு போய் யாராவது கொலை பண்ணுவாங்களா?…. மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவன்….!!!!

தன்னிடம் அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதற்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய கணவன் திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் புறநகர் பகுதியான நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜா. இவர் அந்த பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஷிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை சேர்த்து வைத்து ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார். இது குறித்து அறிந்த ராஜேஷ் தன்னுடைய மனைவி தன்னிடம் அனுமதி கேட்காமலேயே ஸ்மார்ட்போன் வாங்கியதால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் ராஜேஷின் மனைவி வீட்டை விட்டு வெளியே அந்தப் பெண் வரும் நேரம் பார்த்து அவரது வீட்டின் வாசலில் காத்திருந்துள்ளனர். தொடர்ந்து அவரது மனைவி வெளியே வந்த நேரம் பார்த்து கூலிப்படையினர் மற்றும் அவருடைய கணவர் அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் அப்பெண் அலறித் துடித்துள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |