சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் சந்தியா(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் வளசரவாக்கம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 2011 ஆம் ஆண்டு வடபழனி சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு சஞ்சய் அவர் தோழியுடன் நெருங்கி பழகியதால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்.
தற்போது நான் எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் சஞ்சய் எனது வீட்டின் எதிர்ப்புறம் கண்காணிப்பு கேமராவை போர்த்தியும், எனது வாகனத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பொருத்தியும் என்னை கண்காணிக்கப்படுவதோடு, அவரது அலுவலகத்தில் வேலை செய்ய ஊழியர்களை அனுப்பி என்னை மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வளசரவாக்கம் அனைத்து மலர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.