தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் புதூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் துரைசாமி(85) – கோசலை(75). இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்த தம்பதிகள் தங்களுடைய 10 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுடைய மகன் ஆனந்தன் சொத்து அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய தங்கைக்கு சொத்து செல்லக்கூடாது என்று தன்னுடைய தாய் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆனந்தன் தன்னுடைய மகனுடன் சேர்ந்து பெற்றோரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.