ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிந்தபோது விபத்து வழக்கை மீண்டும் விசாரித்தனர். அதன்பின் விசாரணையில் அது விபத்து அல்ல எனவும் மனைவி ஷாலுவை திட்டமிட்டு அவரது கணவர் மகேஷ் சந்த் படுகொலை செய்ததும் தெரியவந்தது.
அதாவது மனைவி பெயரிலிருந்த காப்பீட்டுத்தொகையினை பெற அவர் விபத்து போன்று நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. கூலிப் படை வாயிலாக அவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கென அவர் கூலிப்படைக்கு ரூபாய்.10 லட்சம் கொடுத்திருக்கிறார். இது பற்றி காவல்துறையினர் மகேஷ் சந்த் மற்றும் கூலிப் படையை சேர்ந்த 4 பேரை கைது செய்து இருக்கின்றனர்.