Categories
உலக செய்திகள்

அடப்பாவி?…. பிரபல நாட்டில் “மனைவி குடும்பத்தை தீர்த்து கட்டிய நபர் தற்கொலை”…. அதிர்ச்சியில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் 4 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேட் மாகாணத்தில் ஆண்டிரு  சேல்ஸ்-சாரா மென் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கெலின், வெஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டிருவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாராவின் வீட்டிற்கு ஆண்டிரு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்டிரு  தனது மனைவி சாரா, அவரது தாயார் சொம்லி மென், சகோதரர் கை மென், குடும்ப நண்பர் ஜோவென் வாட்சன் ஆகிய நான்கு பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். ஆனாலும் ஆத்திரம் தீராத ஆண்டிரு  இறந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த சாராவின் தந்தை அனைவரும் இறந்து  கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5  பேரில் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |