கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நாயை கட்டி இழுத்து சென்றுள்ளார்.
பின்னர் அவர் அவிழ்த்து விட்ட போது நாயின் கால் பாதங்களில் ஏற்பட்ட காயங்களால் நாய் சோர்வுற்ற சாலையில் படுத்து விட்டதாக தெரிகிறது . இந்த வீடியோ தற்போது வைரல் ஆனதால், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.