Categories
மாவட்ட செய்திகள்

அடப்பாவி…! 1 1/2 வயது குழந்தையின் காலில்…. அயன்பாக்ஸ் வைத்து சூடு…. வெளியான பகீர் தகவல்…m!!!!

திருவனந்தபுரத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் இடது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது.

மது போதையே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் கூறுகின்றனர். வழக்கமாக குழந்தையை அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால், நான்கு நாட்களாக குழந்தையைக் காணாத பாட்டி, குழந்தையைப் பற்றி விசாரிக்க வீட்டிற்கு வந்தபோது, ​​அவரது காலில் தீக்காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டபோது, ​​மூத்த குழந்தை தீயால் சூடு வைத்ததாக கூறியுள்ளார்.

இதை நம்பாத பாட்டி போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் மூத்த பையனிடம் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. சில நாட்களுக்கு முன், குழந்தைக்கு அயன்பாக்ஸால் சூடு வைக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் தாயும் பாட்டியும் போலீசில் புகார் செய்ததையடுத்து குற்றவாளியை கைது செய்தனர்.

Categories

Tech |