Categories
சினிமா தமிழ் சினிமா

அடம்பிடிக்கும் அனிதா … கடுப்பான ஹவுஸ் மேட்ஸ் … வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் -4  நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்-4  நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் என்பதை வரிசைப்படுத்தும் விதமாக ஒன்றிலிருந்து 13 வரை போட்டியாளர்களுக்கு ரேங்க் கொடுக்கும் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பாலாஜிக்கும் ஜித்தன் ரமேஷ்க்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அடுத்ததாக வெளியான இரண்டாவது புரோமோவில் சனம் ஷெட்டி முதல் இடத்தில் நின்று கொண்டு எனக்கு தான் இந்த இடம் என கூறினார்.

இதையடுத்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ரேங்கில் இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்த அனிதா சம்பத்தை வெளியேற்றி பத்தாவது இடத்திற்கு போகச் சொல்கின்றனர் ஹவுஸ் மேட்ஸ். இதனால் எனக்கு இந்த இடமும் வேண்டாம், நான் பத்தாவது இடத்தில் நிற்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார் அனிதா. இப்படியாக இன்று வெளியான மூன்று புரோமோவால் பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்து இருக்கு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |