நடிகர் சிம்பு இயக்குனரை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக சிம்பு வலம் வருகிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் உடல் எடையை குறைத்துவிட்டு மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்து சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனையடுத்து நடிகர் சிம்பு கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா குமார் படத்தில் தனக்கு நடிக்க விருப்பமில்லை என சிம்பு தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இயக்குனர் கோகுலை மாற்றுமாறு தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் கூடிய விரைவில் சிம்புவின் கொரோனா குமார் படம் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.