இன்றைய காலத்தில், அனைவரும் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்களை தான் விரும்புகிறார்கள். அதற்க்கான சில டிப்ஸை இதில் காணலாம்:
இரவு தூங்கும் முன் புருவங்களில், தினமும் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு அப்படியே விடவும். இதனால் முடி அடர்த்தியாக வளரும்.
தேங்காய் எண்ணெய், புருவங்களின் வறட்சி தன்மையை போக்கி, எண்ணெய் பதம் அளிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . எனவே தேங்காய் எண்ணெயை புருவத்தில் தடவி 30 நிமிடம் மசாஜ் செய்யவும்.
ஆலிவ் எண்ணெய்யில், வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ சத்து நிறைந்து உள்ளது. அந்த எண்ணெயை வைத்து புருவத்தில் மசாஜ் செய்து, 1 மணி நேரம் ஊற வைத்த பின் கழுவவும்.
வெங்காய சாற்றில், சல்ஃபர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி இருக்கிறது. ஆதலால் அது முடியின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது. எனவே அதன் சாறை எடுத்து புருவத்தில் மசாஜ் செய்து, 1 மணி நேரம் கழித்து கழுவவும்.
கற்றாழை முடி வளர்ச்சியை தூண்ட பெரிதும் உதவுகிறது. ஆகையால், அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து, புருவத்தில் தேய்த்து, 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவவும்.
இவ்வாறெல்லாம் தினமும் செய்து வந்தால் புருவம் அடர்தியாகவும், கருமையாகவும் தோன்றும்.