ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட அடல் சுரங்க பாதையில் அடுத்தடுத்து விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலி பகுதியையும், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியையும் இணைக்கும் வகையில் மலையை குடைந்து மிகப் பிரம்மாண்டமான சுரங்க நெடுஞ்சாலை அண்மையில் திறக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோதி இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது கட்டமைக்கப்பட்டது.
சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மலையை குடைந்து செல்லும் இந்த சுரங்க நெடுஞ்சாலை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் முதல் செல்பி எடுக்கும் போது விபத்து என்ற வகையில் இது போன்ற விபத்துகள் நேரிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.